முஸ்லிமாக மாறியதில் நெருக்கடி இல்லை: பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி!

ஏப்ரல் 12, 2018 1290

மெல்போர்ன் (12 ஏப் 2018): நான் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டதில் நெருக்கடி எதுவும் இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் காஜாவின் மனைவி ரேச்சல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முதல் முஸ்லிம் கிரிக்கெட் வீரர் உஸ்மான் க்வாஜா, இவர் ரேச்சல் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம் முஸ்லிம் முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு தான் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டதை ரேச்சல் தெரிவித்தார். மேலும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டதால் எனக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. இது நானாகவே எடுத்த முடிவு உஸ்மான் என்னை இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு எந்தவித அழுத்தமும் தரவில்லை என்று ஒரு தொலைக் காட்சி நேர்காணலில் ரேச்சல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ரேச்சலை எந்த வகையிலும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவில்லை என்றும் இது அவராகவே எடுத்த முடிவு என்றும் உஸ்மான் க்வாஜா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...