முடிந்தது காமன்வெல்த் போட்டிகள் - இந்தியாவுக்கு மூன்றாவது இடம்!

ஏப்ரல் 15, 2018 609

புதுடெல்லி (15 ஏப் 2018): 21 வது காமன்வெல்த் போட்டிகள் முடிவடைந்தன. பதக்கப் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்தது.

ஆஸ்திரேலியாவில் கடந்த 5-ம் தேதி தொடங்கிய 21-வது காமன்வெல்த் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தது. இந்திய அணி 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது. குறிப்பாக நேற்று ஒரே நாளில், இந்தியாவுக்கு 8 தங்கம் உள்பட 17 பதக்கங்கள் கிடைத்தன.

கடந்த 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியை விட இது இந்தியாவின் சிறந்த நிலையாகும். அப்போது, 15 தங்கம் உள்பட 64 பதக்கம் பெற்று 5-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது அதிகமான தங்கப்பதக்கத்தை குவித்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் போட்டிகளில் கலந்து கொண்ட வீர, வீராங்கணைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உங்களால் நாட்டுக்கு பெருமை எனவும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் எனவும் அவர்கள் பாராட்டியுள்ளனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...