சானியா மிர்சா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஏப்ரல் 24, 2018 672

புதுடெல்லி (24 ஏப் 2018): டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கர்ப்பமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் சானியா மிர்சா சூசகமாக தெரிவித்துள்ளார்.

சானியா மிர்சா, கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சானியா மிர்சா சமூக வலைதளத்தில், ஒருபக்கம் மிர்சா என்ற படத்தையும் இன்னொரு பக்கம் மாலிக் என்ற படத்தையும் வரைந்து நடுவில் மிர்சா-மாலிக் என்ற சின்ன படத்தை வரைந்து தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார். இதே படத்தை சோயிப் மாலிக்கும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த தகவலை அறிந்த இருவரது ரசிகர்களும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...