இந்திய இதயங்களுக்காக ஏங்கும் பாகிஸ்தான் வீரர்!

ஏப்ரல் 24, 2018 812

இஸ்லாமாபாத் (24 ஏப் 2018): இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்தியாவில் விசா வழங்கப் பட வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் ஹாக்கி வீரர் மன்சூர் அஹமது.

1994 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் கோப்பையை வெல்ல மன்சூர் அஹமது முக்கிய காரண கர்த்தாவாக அமைந்தவர். 49 வயதான மன்சூர் அஹ்மத்தின் இதயத்திலுள்ள பேஸ்மேக்கரில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் அவர் பாதிக்கப் பட்டுள்ளார். இதனால் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்தியா வருவதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியை அவர் நாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ""நான் இளைஞனாக ஹாக்கி விளையாடியபோது பல இந்திய ரசிகர்களின் இதயங்களை உடைத்துள்ளேன். ஆனால் இப்போது இந்தியர்களின் இதயங்கள் எனக்கு வேண்டும். எனக்கு எதிர் அணியான இந்தியாவின் கேப்டனாக இருந்த தன்ராஜ் பிள்ளையை சந்திக்க வேண்டும் அதற்காகவும் நான் ஆவலாக உள்ளேன் " என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு விசா வழங்க வேண்டுமென்று இந்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி மன்சூர் அஹமதை சந்தித்தப் பின்பு மன்சூர் அஹமதுக்கு தேவையான அனைத்து மருத்து செலவுகளையும் அஃப்ரிடியின் தன்னார்வ அமைப்பு ஏற்பதாக தெரிவித்துள்ளார். அ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...