அனுஷ்காவை விவாகரத்து செய்ய கோஹ்லிக்கு ரசிகர்கள் கோரிக்கை!

மே 02, 2018 805

பெங்களூரு (02 மே 2018): ஐபிஎல் போட்டியில் பெங்களூரு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் அதற்கு ராசியில்லாத அனுஷ்காவே காரணம் என்று கோஹ்லியின் ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை - பெங்களூர் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியை காண விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மா வந்திருந்தார்.

இந்த போட்டியில் பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணம் அனுஷ்கா சர்மாதான் என்று கோஹ்லியின் ரசிகர்கள் பலரும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வந்தனர். சிலர் அனுஷ்கா சர்மா ராசி இல்லாதாவர். அவர் வந்ததால்தான் பெங்களூர் தோல்வி அடைந்தது. இனிமேல் தயவு செய்து போட்டியை காண வராதீர்கள் என்று பதிவிட்டுள்ளனர்.

இன்னும் சிலர் அனுஷ்காவை விவாகரத்து செய்துவிடுங்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளை பலர் இவ்வாறு கருத்திடுபவர்களை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...