ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்திய செஸ் வீராங்கணை சவுமியா விலகல்!

ஜூன் 14, 2018 1101

புதுடெல்லி (14 ஜூன் 2018): இரானில் நடைபெறவுள்ள ஆசிய செஸ் சாம்பியன் போட்டியில் ஹிஜாப் அணிந்து விளையாட எதிர்ப்பு தெரிவித்து இந்திய வீராங்கணை சவுமியா போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடர், ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை இரானில் நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள இந்தியாவை சேர்ந்த சௌமியா சுவாமிநாதன் தேர்வாகியிருந்தார்.

உலக ஜூனியர் பெண்கள் பட்டம், பெண்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் உள்பட பல பட்டங்களைப் பெற்ற செளமியா, உலக பெண் செஸ் போட்டியாளர்கள் தர வரிசையில் 97 வது இடத்திலும், இந்திய அளவில் 5வது இடத்திலும் உள்ளார்.

இந்நிலையில் இரானில் அனைத்து மத பெண்களும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எனது சுதந்திரத்தில் இரான் அரசு தலையிடுகிறது எனக் கூறி சவுமியா சுவாமிநாதன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

மிக முக்கியமான போட்டியிலிருந்து விலகுவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ள சவுமியா, விளையாட்டுப் போட்டிகளில் மத அடையாளங்களை புகுத்துவது ஏற்புடையதல்ல என்றும் இப்போட்டியிலிருந்து விலகுவதே சரியானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...