சத்தமில்லாமல் சாதித்த 12 வயது தமிழக சிறுவன்!

ஜூன் 25, 2018 686

சென்னை (25 ஜூன் 2018): 12 வயதே நிரம்பிய சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா சத்தமில்லாமல் சாதனை ஒன்றை படைத்துள்ளார். இவர் சர்வதேச செஸ் போட்டியில் வென்று உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இத்தாலியில் நடந்துவரும் கிரெடின் ஓபன் தொடரின் தொடக்க நாளில் இருந்து தனது வெற்றிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்துக்கொண்டு வந்தார்.கடந்த சனிக்கிழமை அன்று இத்தாலியின் ஜி.எம் லுகா மொரானியை வீழ்த்தினார்.

கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற தரவரிசையில் 2482 புள்ளிகள் பெற்றவருடன் மோத வேண்டும் என்ற நிலையில், ஒன்பதாவது சுற்றில் 2514 ரேட்டிங் பெற்றிருந்த நெதர்லாந்தைச் சேர்ந்த புரிஜ்செர் ரொய்லாண்ட் என்பவருடன் மோதினார். அந்த போட்டி டிராவில் முடிந்ததால், 13 வயதுக்குள் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா.

கடந்த 2017-ம் ஆண்டு கிரீஸில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் வென்று முதன்முதலில் ஜூனியர் கிராண்ட்மாஸ்டர் பட்டதை வென்றார். பிரக்ஞானந்தா 2500 ரேட்டிங் பாய்ண்ட்களையும் கடந்து விளையாடியுள்ளார். உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் சாதனையை, உக்ரைனைச் சேர்ந்த செர்ஜே கர்ஜாகின் தனது 12 வயதில் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...