இந்திய கைப்பந்து கேட்பனாக தமிழக ஏழை மாணவி தேர்வு!

June 26, 2018

புதுடெல்லி (26 ஜூன் 2018): இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக தமிழக மாணவி ஹாலினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கோபிச் செட்டிப்பாளையம் விவசாய குடும்பத்தில் பிறந்த ஹாலினிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஹாலினி சிறு வயதில் இருந்தே விளையாட்டில் அதிக ஆர்வமுடையவர். குறிப்பாக கூடைப்பந்தாட்டம் ஹாலினிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. கல்லூரியில் வகுப்பறையில் இருந்ததை விட மைதானத்தில் ஹாலினி இருந்த நேரம் தான் அதிகம் என்கிறார்கள் அவருடைய வகுப்பு ஆசிரியர்கள். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றிக் கொண்ட ஹாலினி இப்போது தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 10 தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை வியட்நாமில் நடைப்பெற்ற 19 ஆவது ஆசிய அளவிலான 19 வயதுக்குள்பட்ட மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி கடுமையாக விளையாடி 11 ஆவது இடத்தை பிடித்திருந்தார். அந்த போட்டியில் ஹாலினியின் பங்களிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இந்திய அணியில் இடம்பிடித்து, அணியின் கேப்டனாகவும் உயர்ந்து, ஆசிய அளவிலான போட்டியிலும் அட்டகாசமாக விளையாடி நாடு திரும்பி ஹாலினிக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் வெளியான பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஷாலினி குறித்த வெளியான சிறப்பு கட்டுரை ஒன்றில், இந்தியாவில் மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டியில் அடுத்தும் மின்னும் நட்சத்திரமாக ஹாலினி கண்டிப்பாக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களின் கணிப்பின் படி ஜூன் மாதமே ஹாலினி இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!