உலகக் கோப்பை கால்பந்து: பிரேசில் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஜூலை 02, 2018 408

மாஸ்கோ (02 ஜூலை 2018): உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு பிரேசில் அணி முன்னேறியுள்ளது.

இன்று நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் பிரேசில் மெக்சிகோவை வீழ்த்தியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் மெக்சிகோ அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஆட்டத்தின் முழுநேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக ரஷ்யா, குரேஷியா, உருகுவே, பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...