அகில இந்திய வலு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற அதிராம்பட்டினம் மாணவி!

ஜூலை 02, 2018 906

பட்டுக்கோட்டை (02 ஜூலை 2018): அகில இந்திய வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவி சாதனை புரிந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் அகில இந்திய அளவிலான வலு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட வீரர்களும், 250க்கும் மேற்பட்ட வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பாக தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதர்முகைதீன் கல்லூரியில் பிபிஏ இரண்டாமாண்டு படிக்கும் மாணவி எஸ்.லோகபிரியா 57 கிலோ உடல் எடைபிரிவில் 357.5கிலோ கிலோ எடையை தூக்கி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற லோகபிரியாவுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. 

இதன் மூலம் இவர் வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் 6 வரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக வலுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ளார். லோகபிரியா பட்டுக்கோட்டை பெரியார் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...