பாகிஸ்தானை வாழ்த்திய முஹம்மது கைஃப் - இந்தியாவை வாழ்த்திய சுஹைப் அக்தார்!

ஜூலை 10, 2018 643

புதுடெல்லி (10 ஜூலை 2018): ஆஸ்திரேலியாவை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வென்ற பாகிஸ்தான் அணியை முன்னாள் பிசிசிஐ கிரிக்கெட் வீரர் முஹம்மது கைஃப் பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இளம் வீரர் ஃபகர் ஜமான் அதிவேகத்தில் 91 ரன்கள் அடித்து பாகிஸ்தான் வெற்றிக்கு உதவினார். அவரை ட்விட்டரில் முஹம்மது கைஃப் பாராட்டியுள்ளார்.

அதேபோல இந்தியாவின் பிசிசிஐ அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் இந்தியாவின் ரோஹித் சர்மா சதம் அடித்து தொடரை வெல்ல காரணமாக அமைந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சுஹைப் அக்தார் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய ஆதரவாளர்கள் முஹம்மது கைஃபையும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் சுஹைப் அக்தாரையும் சமூக வலைதளங்களில் விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...