இந்திய ஒலிம்பிக் சாம்பியன் முஹம்மது ஷாஹிதின் விருதுகளை திருப்பி அளிக்க முடிவு!

ஜூலை 18, 2018 699

புதுடெல்லி (18 ஜூலை 2018): இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் கேப்டன் முஹம்மது ஷாஹிதுக்கு வழங்கப் பட்ட பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகள் உட்பட அனைத்து விருதுகளையும் திருப்பி அளிக்க அவரது மனைவி முடிவெடுத்துள்ளார்.

1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கியில் தங்கபதக்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்கில் கேப்டனாக இருந்த வீரர் முஹம்மது ஷாஹிதுக்கு அப்போது பல்வேறு விருதுகள் வழங்கப் பட்டன. அதில் குறிப்பிடத் தக்க விருது பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகள். முஹம்மது ஷாஹித் கடந்த 2016 ஆம் ஆண்டு 56 வது வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் உயிரிழந்தபோது ஏழ்மை நிலையில் இருந்ததாக கூறப் படுகிறது. அப்போது அவரது இறுதிச் சடங்கிற்கு வந்த மத்திய அரசின் பிரதிநிதிகள் அவரது குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்து உதவிகளும் வழங்கப் படும் என உறுதி அளித்திருந்தனர்.

ஆனால் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று முஹம்மது ஷாஹிதின் மனைவி பர்வீன் விரக்தியுடன் பேசியுள்ளார். மேலும் மத்திய அரசு தனது குடும்பத்தை ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ள பர்வீன், முஹம்மது ஷாஹிதுக்கு வழங்கப் பட்ட அனைத்து விருதுகளையும் மத்திய அரசிடம் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...