ஹசின் ஜஹான் முஹம்மது சமி குறித்து தந்துள்ள அடுத்த அதிர்ச்சி தகவல்!

ஆகஸ்ட் 03, 2018 1077

புதுடெல்லி (03 ஆக 2018): பிசிசிஐ அணியின் வேகப் பந்து வீச்சாளர் முஹம்மது சமி போலியான பிறந்த நாள் சான்றிதழ் அளித்துள்ளதாக சமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜிஹான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முஹம்மது சமி குறித்தும் அவருக்கு பிற பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ் சாட்டி சமியிடம் இருந்து பிரிந்து வாழும் ஹசின் ஜஹான் தற்போது தனது முந்தைய தொழிலான மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையி அவர் தற்போது இட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் முஹம்மது சமியின் 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். மேலும் சமி போலியான பிறந்த நாள் சான்றிதழ் மூலம் பிசிசிஐ அணியில் இடம் பிடித்துள்ளதாக அவர் குற்றஞ் சாட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிசிசிஐ அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இதில் 3 விக்கெட்டுகளை சமி வீழ்த்தியமை குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...