உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு பி.வி. சிந்து தகுதி பெற்றார்!

ஆகஸ்ட் 04, 2018 386

புதுடெல்லி (04 ஆக 2018): உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறி உள்ளார் பி.வி. சிந்து.

இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 3 ஆம் இடத்தில் இருக்கும் பி.வி. சிந்து, 2 ஆம் இடத்தில இருக்கும் ஜப்பானின் அகானே யமகூச்சியை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 19-21, 21-19, 21-18 என்ற கணக்கில் 2 ஆம் நிலை வீரரை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றார்.

இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் மற்றும் சீனாவின் பிங்ஜியாவோ மோதின. இதில் கரோலினா மரின் வெற்றி இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...