சச்சின் டெண்டுல்கருக்கும் நடிகைக்கும் இடையே தொடர்பு?

செப்டம்பர் 12, 2018 609

மும்பை (12 செப் 2018): கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கும் ஒரு நடிகைக்கும் இடையே தொடர்பு இருந்ததாக நடிகை ஶ்ரீரெட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தெலுங்குப் படவுலகில் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஶ்ரீரெட்டி, பின்பு தமிழ் பட ஜாம்பவான்கள் மீதும் பாலியல் குற்றச் சாட்டுகளை வைத்தார். பின்பு அமைதி காத்தார்.

இந்நிலையில் மீண்டும் யாரும் எதிர் பார்க்காத நபர் மீது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது சச்சின் ஐதராபாத் வந்தபோது ஒரு சார்மிங் பெண்ணுடன் காதல் செய்ததாகவும், கிரிக்கெட்டில் மட்டுமல்ல ரொமன்சிலும் சச்சின் கலக்குகிறார்." என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவ்விவகாரம் சச்சின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...