கிரிக்கெட் மைதானத்தில் இந்திய தேசிய கீதத்தை பாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்!

செப்டம்பர் 23, 2018 669

துபாய் (23 செப் 2018): பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் இந்திய தேசிய கீதம் பாடியபோது வாயசைத்து மரியாதை செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாயில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் போட்டியில் மோதியபோது இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப் பட்டன. அப்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்திய தேசிய கீதத்தை பாகிஸ்தான் தேசிய கொடியுடன் பாடியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இன்று நடைபெறும் இந்தியா, பாக். போட்டியில் இரு நாட்டு தேசிய கொடிகளையும் ஏந்தி நிற்கவுள்ளதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். மேலும் இரு நாட்டு ஒற்றுமைக்காகவே இதனை நான் செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...