கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

அக்டோபர் 08, 2018 754

சிட்னி (08 அக் 2018): ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் மேத்திவ் ஹெய்டன் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரரான மேத்திவ் ஹைடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கினார். சாலை விபத்தில் சிக்கிய அவரை அப்பகுதியில் இருந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நெற்றியில் தேய்மானம், கழுத்தில் முறிவு எனும் உயிருக்கு ஆபத்து இல்லாத பிரச்சனைகளுடன் தற்போது மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் குறித்து தனது புகைப்படங்களுடன் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

46-வயது ஆகும் மேத்திவ் கடந்த 2009-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்த ஓய்வு பெற்றார். 103-டெஸ்ட் 161-ஒருநாள் மற்றும் 9-டி20 பேட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ள இவர் விரைவில் குனமடைய வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...