கவுதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

டிசம்பர் 04, 2018 511

புதுடெல்லி (04 டிச 2018): பிசிசிஐ அணியின் தொடக்க ஆட்டக்கார கவுதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு முடிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘கனத்த இதயத்துடன்தான் மிகக் கடினமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் கனத்த இதயத்துடன் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவை அறிவிப்பதாக’ கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த கவுதம் கம்பீர், கடந்த 2003 முதல் 2013 வரை 147 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5,238 ரன்களை குவித்தார். மேலும், 37 டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

மேலும், கடந்த 2004 முதல் 2016 வரை 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கம்பீர் 4,154 ரன்களை குவித்தார். இதில் 9 சதங்களும், 22 அரை சதங்களும் அடங்கும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...