ஆஸ்திரேலியாவில் சாதித்த இந்தியாவின் பிசிசிஐ!

டிசம்பர் 10, 2018 450

அடிலைட் (10 டிச 2018): அடிலைடில் நடந்த, பிசிசிஐ ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், பிசிசிஐ அணி அபார வெற்றி பெற்றது.

பிசிசிஐ அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 235 ரன்களும் எடுத்தன. பிசிசிஐ தனது 2வது இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுக்க, 323 ரன்கள் இலக்கை நோக்கி 2ம் இன்னிங்சை தொடங்கியது ஆஸ்திரேலியா.

நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் 31ரன்கள் வித்தியாசத்தில் பிசிசிஐ வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில், இந்திய அணி முதன் முறையாக முதல் டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, நடப்பாண்டில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப் பெற்ற இந்திய அணியின் முதல் கேப்டன் எனும் பெருமையை விராட் கோலி பெறுகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...