இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற சிறுவன்!

ஜனவரி 17, 2019 244

புதுடெல்லி (17 ஜன 2019): இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை 12 வயது குகேஷ் பெற்றுள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் தொடரில் வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் குகேஷ் இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார். இதன்மூலம் நாட்டின் இளம்வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பிரக்ஞானந்தாவின் சாதனையை அவர் முறியடித்திருக்கிறார்.

பிரக்ஞானந்தா இந்தச் சாதனையைத் தனது 12 வயது 10 மாதங்களில் நிறைவு செய்தார். ஆனால், குகேஷ், 12 வயது 7 மாதங்கள் மற்றும் 17 நாள்களில் இந்தச் சாதனையைத் தன் வசப்படுத்தியிருக்கிறார். உக்ரைனைச் சேர்ந்த செர்ஜே கர்ஜாகினின் சாதனையை 17 நாள்களில் அவர் தவறவிட்டிருக்கிறார். அதேநேரம் உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பட்டியலில் குகேஷ் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...