பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு நடந்த கொடுமை!

ஜனவரி 22, 2019 489

புதுடெல்லி (22 ஜன 2019): முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரின் மனைவியும் நடிகையுமான ஃபார்ஹின் பிரபாகரிடம் திருடர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

மனோஜ் பிரபாகரின் மனைவி ஃபார்ஹின் பிரபாகர். இவர், பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். ஞாயிறு அன்று தன் காரில் தெற்கு டில்லியில் உள்ள செலக்ட் சிட்டி மாலுக்கு சென்றுக் கொண்டிருந்தார் ஃபார்ஹின். அப்போது சிக்னலில் கார் நிறுத்திய போது, நான்கு பேர் காரின் ஜன்னலைத் தட்டி, 'காரை ஏன் தாறுமாறாக ஓட்டுகிறீர்கள்' என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது, ஃபார்ஹினிடம் இருந்து மொபைல், 16,000 ரூபாய் பணம் உட்பட பல பொருட்களை கண் இமைக்கும் நேரத்தில் திருடிவிட்டு, ஓடத் துவங்கினர். கொள்ளையர்களைத் தடுக்க துணிந்த ஃபார்ஹின், தாக்கப்பட்டுள்ளார். அவர்கள், தடாலடியாக அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.

ஆஸ்துமா நோயால் அவதிப்படும் ஃபார்ஹின், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை ராணுவ அதிகாரி ஒருவர் கண்டு, போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

திருடர்களின் கார் எண்ணை வைத்தும் சிசிடிவி மூலமும், அவர்களைக் கண்டறிய நடவடிக்கைகளை போலீஸ் எடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...