தேசிய கொடிக்கு தோனி அளித்த மரியாதை - வைரலாகும் போட்டோ!

பிப்ரவரி 11, 2019 390

நியூசிலாந்து (11 பிப் 2019): இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி இந்திய தேசிய கொடிக்கு அளித்த மரியாதை தற்போது வைரலாகி வருகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது தோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் அத்து மீறி கையில் தேசியக்கொடியுடன் ஓடி வந்த ரசிகர் ஒருவர், டோனியின் காலில் விழுந்து ஆசி பெற முயன்றார். அப்போது தேசியக்கொடி மைதானத்தில் கீழே விழுமாறு இருந்த நிலையில், உடனே டோனி தேசியக்கொடியை தனது கைகளில் வாங்கிக் கொண்டு, ரசிகரை அனுப்பி வைத்தார். தேசியக்கொடிக்கு டோனி உரிய மரியாதை அளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...