பேட்டிங்கின் போது மயங்கி விழுந்து இளம் கிரிக்கெட் வீரர் மரணம்!

மார்ச் 22, 2019 264

கொல்கத்தா (22 மார்ச் 2019: மேற்கு வங்கம் கொல்கத்தாவில் பேட்டிங்கில் ஈடுபட்டிருந்த இளம் கிரிக்கெட் விரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சோனு யாதவ் என்ற 22 வயது கிரிக்கெட் வீரர் உள்ளூர் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பேட்டிங்கில் ஈடுபட்டபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி சோனு உயிரிழந்தார். சோனு பல்வேறு கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி சாதனை புரிந்தவர்.

ஏற்கனவே அங்கிட் சர்மா என்ற இளம் கிரிக்கெட் வீரரும் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...