அஃப்ரிடியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன் - காம்பீர் தாக்கு!

மே 05, 2019 235

புதுடெல்லி (05 மே 2019): பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல நான் தயார் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

அப்ரிடி தனது வாழ்க்கை வரலாற்றை ’கேம் சேஞ்சர்’ எனும் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அதில் தனது வயது குறித்த பல சர்ச்சையான விஷயங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதில் ஒரு அத்தியாத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீருக்கும் அவருக்கும் இடையில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த மோதல் குறித்துப் பேசியுள்ளார். அது இப்ப்போது மீண்டும் அவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனையைக் கிளப்பியுள்ளது.

தனது புத்தகத்தில் ‘ விளையாட்டின் போது நடக்கும் மோதல்களில் சில தொழில் சார்ந்ததாக இருக்கும். ஆனால் சில தனிப்பட்ட மோதல்களாக மாறிவிடும். கம்பீருக்கும் எனக்கும் நடந்த மோதலைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் காட்டும் ஆட்டிடியூட் அளவுக்கு ரெக்கார்டு இல்லாதவர். டான் பிராட்மேன் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் ஆகியோரைப் போன்று நடந்துகொள்வார். எங்கள் ஊரில் இவர் போன்றவர்களை சரியல் (சிடுமூஞ்சிக்காரன்) என அழைப்போம். மேலும் அன்றைய எங்களில் மோதலில் நாங்கள் இருவரும் மாறி மாறி மற்றவர் வீட்டுப் பெண்களைப் பற்றிப் பேசிக்கொண்டோம்’ எனக் கூறியிருந்தார்.

அஃப்ரிடியின் இந்தக் கருத்துக்கு பதிலளித்துள்ள கம்பீர் டிவிட்டரில் ‘நாங்கள் இன்னும் பாகிஸ்தான் காரர்களுகு மருத்துவ சுற்றுலாவுக்காக இன்னமும் நாங்கள் விசா கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் இந்தியா வந்தால் உங்களை நானேத் தனிப்பட்ட முறையில் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

கவுதம் காம்பீர் சமீபத்தில் பாஜகவில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...