கோமதி மாரிமுத்துவின் தங்கப் பதக்கம் பறிக்கப்படுமா?

மே 21, 2019 336

புதுடெல்லி (21 மே 2019): ஊக்க மருந்து உட்கொண்ட புகாரில் சிக்கியுள்ளதால் கோமதி மாரிமுத்துவின் தங்கப் பதக்கம் கேள்விக் குறியாகியுள்ளது.

தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து.

இந்நிலையில் அவருக்கு நடத்தப் பட்ட ஊக்க மருந்து சோதனையில் நார் ஆண்ட்ரோஸ்டெரோன் என்ற ஊக்க மருந்து பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதி செய்யப் பட்டால் அவருடைய தங்கப் பதக்கம் பறிக்கப் படுவதோடு, நான்கு ஆண்டுகள் தடையும் விதிக்கப் படும். இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழக வீராங்கணை சாந்திக்கு ஆண் தன்மை உள்ளதாக குற்றம் சாட்டப் பட்டு அவர் தடகளப் போட்டிகளிலிருந்து தடை விதிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...