கவுதம் கம்பீர் படித்தவர்தானா? - அஃப்ரிடி கேள்வி!

மே 28, 2019 327

புதுடெல்லி (28 மே 2019): இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிழக்கு டெல்லி எம்.பியுமான கவுதம் கம்பீர் மீது பாகிஸ்தான் வீரர் அப்ரிதி விமர்சனங்களை பதிவு செய்துள்ளார்.

புல்வாமா தாக்குதலையும், உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டியையும் இணைத்து கம்பீர் தெரிவித்த கருத்து "முட்டாள் தனமானது" என்று கூறியுள்ளார் அப்ரிதி. முன்னதாக கம்பீர் இந்தியா பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட்டே ஆடக்கூடாது என கூறியிருந்தார்.

இந்தியா பாகிஸ்தான் அணியை மான்செஸ்டரில் ஜூன் 16ம் தேதி உலகக் கோப்பை தொடரில் சந்திக்கிறது.

கவுதம் கம்பீரின் இந்த பரிந்துரைக்கு அப்ரிதி கடும் விமர்சனங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். ''கம்பீர் சொல்வது அர்த்தமற்றது. படித்த யாராவது இப்படி கூறுவார்களா, கம்பீர் படித்தவர்தானா? என்று சந்தேகம் உள்ளது."என்றார்.

அப்ரிதி சமீபத்தில் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் கம்பீரை அணுமுறையற்ற வீரர் என்று விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த கம்பீரும் "இந்தியா மெடிக்கல் டூரிஸத்தை ஊக்குவிக்கிறது அப்ரிதியை நல்ல மனநல மருத்துவரிடம் காட்டுகிறேன். இந்தியா வர சொல்லுங்கள்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...