உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு முதல் வெற்றி!

ஜூன் 06, 2019 259

லண்டன் (05 ஜூன் 2019): இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் தன் முதல் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய இந்திய அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்த தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது இந்தியா.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மாேதின. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் நிதானமாக ஆடினர். சிகர் தவான் மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் ஏமாற்றினாலும், துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, நிதானமாக ஆடி சதம் அடித்தார். இறுதி வரை ஆட்டம் இழக்கமால் இருந்து, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

அவரின் அதிரடி ஆட்டத்தால், 47.3 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...