இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை போட்ட இம்ரான்கான்!

ஜூன் 09, 2019 447

இஸ்லாமாபாத் (09 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் போட்டியில், வித்தியாசமாக செயல்பட அனுமதி கேட்டிருந்த பாகிஸ்தான் அணியின் கோரிக்கைக்கு தடை போட்டுள்ளார் பாக் பிரதமர் இம்ரான் கான்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மார்ச் மாதம் ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர்.

அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவத்திருந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் தோனி ராணுவ முத்திரை பதித்த கிளவுசை அணிந்து விளையாடினார். இது தற்போது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோல பாகிஸ்தான் அணி செயல்பட முடிவெடுத்தது. உலகக் கோப்பை தொடரில் வரும் 20 ம் தேதி நடைபெற உள்ள இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விக்கெட்களை வீழ்த்தும் போது அதை வித்தியாசமான முறையில் கொண்டாட பாகிஸ்தான் வீரர்கள் முடிவெடுத்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டு இருந்தனர்.

இது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பார்வைக்கு சென்றுள்ளது. இதற்கு தடை விதித்த இம்ரான்கான், இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். விளையாட்டில் அரசியலை புகுத்த வேண்டாம் என்று தனது அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...