உலகக் கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவை அலற வைத்த இந்தியா!

ஜூன் 09, 2019 390

லண்டன் (09 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா (பிசிசிஐ) அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பையின் 14-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்தியாவின் அபார பேட்டிங் திறமையால் இந்தியா 50 ஓவரில் 352 ரன்கள் எடுத்தது. ஷிகார் தவான் சதம் அடித்தார்.

அடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...