உலக கோப்பை கிரிக்கெட்: பல அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம்!

ஜூன் 17, 2019 378

லண்டன் (17 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் லீக் ஆட்டத்தில், இன்று நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தன.

இதனை தொடர்ந்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் விளையாடிய வங்கதேசம் அணி, மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 41.3 ஓவரில் 322 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷகிப் அல் ஹசன் சிறப்பாக ஆடி 124 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக லிடான் தாஸ் 69 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார்.

ஏற்கனவே பாகிஸ்தானையும், தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி திறன் வாய்ந்த அணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது வங்கதேச அணி.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...