மோடிஃபை செய்யப் பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி

ஜூன் 29, 2019 481

லண்டன் (29 ஜூன் 2019): இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கவுள்ளது.

இங்கிலாந்தில் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல் வெற்றிக் கொடி கட்டி வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் தலா ஒரு புள்ளி வழங்கப் பட்டது.

இந்நிலையில் ஜூன் 30-ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இடையே உலகக்கோப்பை லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. அன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வழக்கமான ஜெர்சியுடன் விளையாட போவதில்லை, அதற்கு பதிலாக இந்திய அணி ஆரஞ்சு மற்றும் கருமை ஊதா நிறம் பெரும்பாலும் கொண்ட ஜெர்ஸியுடன் களமிறங்கும்.

ஏற்கனவே இந்திய அணியை போன்றே இங்கிலாந்து, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணி வீரர்கள் நீல நிற ஜெர்சியுடன் ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் ஐசிசியின் புதிய விதிமுறைப்படி போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் ஒரே நிற உடையில் களம் இறங்க கூடாது. அதனால் போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து ஜெர்சியில் எந்த மாற்றமும் செய்து கொள்ள தேவையில்லை. அதனால், ஜூன் 30-ஆம் தேதி இங்கிலாந்துடன் மோதும் ஆட்டத்தில் இந்திய அணி தங்களது ஜெர்சியை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அன்றைய இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஆரஞ்சு நிறம் பெரும்பாலும் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஜெர்ஸியுடன் களமிறங்கும். புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சியின் புகைப்படத்தை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இதற்கிடையே இந்திய அணியின் ஜெர்சியை பலரும் காவி நிறம் போன்று இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...