இந்தியா வெற்றி பெற பிரார்த்திக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் - இது எப்படி இருக்கு?

ஜூன் 29, 2019 580

லண்டன் (29 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும்.

7 புள்ளிகளுடன் உள்ள பாகிஸ்தான் இனி ஆஃப்கானிஸ்தானையும், வங்கதேசத்தையும் எதிர் கொண்டு வெற்றி பெற்றால் 11 புள்ளிகளுடன் செமி ஃபைனலுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே ஜூன் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - இங்கிலாந்து போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால், பாகிஸ்தான் செமி ஃபைனல் கனவு தவிடு பொடியாகிவிடும். எனவே பாகிஸ்தானியர்கள் இந்தியா வெற்றி பெறவே பிரார்த்திப்பார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், "இந்தியாவை ஆதரிக்க வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு உள்ளது. ஆனால் அவர்கள் யாரை ஆதரிப்பார்கள்? என்று கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...