சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து சுஹைப் மாலிக் ஓய்வு - சானியா மிர்ஸா நெகிழ்ச்சி பதிவு!

ஜூலை 06, 2019 306

லண்டன் (06 ஜூலை 2019): சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தான் வீரர் சுஹைப் மாலிக் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

லர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வங்க தேசத்திற்கு எதிரான போட்டி முடிவடையும் போது இதனை சுஹைப் மாலிக் அறிவித்தார்.

இந்நிலையில் அவரது மனைவியும் இந்திய டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சா, சுஹைப் மாலிக்கின் விலகல் குறித்து தெரிவிக்கையில், "சுஹைப் நீங்கள் உங்கள் நாட்டிற்காக சிறப்பாகவே விளையாடினீர்கள், இதனால் அநான் பெருமை அடைகிறேன். 20 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளீர்கள். எந்த ஆரம்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு. அதுபோல்தான் இதுவும். இனி குடும்ப சகிதம் நான் நீங்கள் நம் மகன் என மகிழ்ச்சியான வாழ்க்கையை மேலும் மெருகேற்றுவோம்." என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...