மீண்டும் காவி உடையா? - பதற்றத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஜூலை 06, 2019 983

லண்டன் (06 ஜூலை 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோதும் பட்சத்தில் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக அணிந்த காவி உடையே அணிய நேரிடும் என்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

இந்திய அணி இன்று நடைபெறும் ஆட்டத்தின் முடிவில் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் நீடிக்கும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை அரையிறுதியில் எதிர்கொள்ளும், அப்போது ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக அணிந்த ஜெர்சி அணிந்தே இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.

உலகக்கோப்பையில் அரையிறுதிக்குள் ஆஸ்திரேலியா இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. முதல் இடத்தை பிடிக்க போவது இந்தியாவா இல்லை ஆஸ்திரேலியாவா என்பது இன்று நடைபெறும் போட்டியின் முடிவிலேயே தெரியவரும்

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணியுடன் தோல்வியடைந்து, இந்திய அணி இலங்கையை வீழ்த்தி வெற்று பெற்றால் இந்திய அணி புள்ளிப்பட்டியளில் முதலாவது இடத்திற்கு முன்னேறும். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றமும் இருக்காது. இந்திய அணி 2-வது இடத்திலேயே நீடிக்கும்.

அப்படி 2-வது இடத்தில் நீடிக்கும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் மோத வேண்டிய நிலைமை ஏற்படும். ஐசிசி விதிமுறைப்படி அப்போது ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து தான் இங்கிலாந்து அணியுடன் மோத வேண்டிய சூழல் ஏற்படும்.

ஏற்கனவே இங்கிலாந்து அணியுடன் அதே உடையை அணிந்து இந்திய அணி தோல்வியை தழுவியதால் மீண்டும் அந்த நிலமை வந்துவிடுமோ என கிர்க்கெட் ரசிகர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...