அரையிறுதியில் முஹம்மது சமி இடம்பெறாததன் பின்னணி என்ன? - பயிற்சியாளர் கேள்வி!

ஜூலை 10, 2019 666

லண்டன் (10 ஜூலை 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் முஹம்மது சமி இடம்பெறாதது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து முகமது ஷமியின் பயிற்சியாளர் பத்ருதீன் சித்திக் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

"முகமது ஷமி இடம் பெறாதது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. 14 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒருவரை எப்படி ஆடும் லெவனில் இருந்து நீக்கம் செய்ய முடியும். அவரிடம் இதை விட வேறு எதனை எதிர்பார்க்கிறீர்கள்?. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ஷமி விளையாடவில்லை.

அவருக்கு ஓய்வு அளித்து விட்டு அரையிறுதியில் களம் இறக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. முதல் 6 பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாட வேண்டும். இல்லாவிட்டால் நாம் தோற்கத்தான் நேரிடும்.

முகமது ஷமிக்கு உலகக்கோப்பை தொடரில் ஆரம்பத்திலேயே வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் வழங்கப்பட்ட வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்தார் என பத்ருதீன் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...