கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு!

ஜூலை 11, 2019 513

புதுடெல்லி (11 ஜூலை 2019): உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதியில் கடைசி வரை போராடியதற்காக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த்உ 221 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அதேவேளை கடைசி வரை போராடிய இந்திய அணியை பாராட்டியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...