பாஜகவில் இணைகிறாரா தோனி?

ஜூலை 14, 2019 463

புதுடெல்லி (14 ஜூலை 2019): முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி பாஜகவில் இணைகிறார் என்கிற தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தோனி விரைவில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததும், தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 2020-ம் ஆண்டு நடக்க உள்ள 20-20 உலகக்கோப்பை வரை அவர் விளையாடுவார் என தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த இடைப்பட்ட நேரத்தில் தோனி அரசியலில் பிரவேசம் செய்ய உள்ளதாக ஒரு செய்தி வேகமாக பரவி வருகின்றது. கடந்த ஆண்டு பா.ஜ.க மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்திருந்தார் மகி. இதனையெல்லாம் சேர்த்து வைத்து அவர் பா.ஜ.கவில் இணைவார் என அப்போதே பேசப்பட்டது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சங்சய் பஸ்வான் தோனி குறித்து பேசியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் நிச்சயம் தோனி பா.ஜ.க.வில் இணைவார் என்றும், அதற்காக அவர் பேசி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த வருட இறுதியில் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலுலில் தோனியின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...