ஜம்மு காஷ்மீரில் ராணுவ பணியில் கிரிக்கெட் வீரர் தோனி!

ஆகஸ்ட் 01, 2019 162

ஜம்மு (01 ஆக 2019): இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ். தோனி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் டோனி பங்கேற்க மாட்டார் எனவும், அவர் அடுத்த 2 மாதம் ராணுவத்தில் பணியாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள விக்டர் படையுடன் தோனி நேற்று இணைந்தார். அவர் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை காஷ்மீரில் பணியில் ஈடுபடவுள்ளார். ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிரிக்கெட்டில் அனுபவ வீரரான தோனி அவரது ஓய்வு குறித்து விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் அவர் ராணுவ வீரராக தேர்வு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...