முன்னாள் பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் அப்துல் காதர் மரணம்!

செப்டம்பர் 07, 2019 367

லாஹூர் (07 செப் 2019): முன்னாள் பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் அப்துல் காதர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63.

வரும் செப்டம்பர் 15ம் தேதி தனது 64வது பிறந்தநாளை கொண்டாட இருந்தார். இதற்கிடையில் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதை அவரின் குடும்பத்தார் உறுதி செய்துள்ளனர்.

இவரைப்போலவே இவரின் நான்கு மகன்களும் ரஹ்மான், இம்ரான், சுல்தான், உஸ்மான் ஆகியோரும் பாகிஸ்தான் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். இதில் இவரின் இளைய மகன் உஸ்மான், தந்தையைப்போலவே லெக் ஸ்பின்னர். இவர் கடைசியாக நடந்த பிக் பாஷ் டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடினார்.

80களில் கிரிக்கெட் உலகில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், காதர் சுழற்பந்துவீச்சை உயிரிப்புடம் வைத்திருந்ததே அவரின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...