சானியா மிர்சாவின் தங்கையைமணக்கும் அசாருத்தீனின் மகன்!

அக்டோபர் 07, 2019 391

ஐதராபாத் (07 அக் 2019): முன்னாள் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அசாருத்தீனின் மகன் ஆசாத் சானியா மிர்சாவின் தங்கையை மணக்கவுள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல வெற்றிகளை நாட்டிற்காக பெற்று கொடுத்தவர் அசாருதீன். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அசாரூதின் அதன்பின் அரசியலில் குதித்தார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.

இந்த நிலையில் அசாரூதின் மகன் ஆசாத்துக்கும் சானியா மிர்சாவின் தங்கை ஆனமுக்கும் திருமணம் பேசி முடித்து நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை சானியா மிர்சா உறுதி செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...