வங்க தேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு இரண்டு வருடங்கள் தடை!

அக்டோபர் 29, 2019 175

டாக்கா (29 அக் 2019): சூதாட்டம் தொடர்பான தகவலை தெரிவிக்காத காரணத்தால் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு 2 வருடம் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ளது.

ஷகிப் உல் ஹசன் 2 வருடங்களுக்கு முன் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டக்காரர் ஒருவர் அவரை அணுகியுள்ளார். ஆனால் இந்த விவகாரம் குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் ஷகிப் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தை தற்போது ஐசிசியிடம் ஷகிப் அல் ஹசன் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் சூதாட்டம் தொடர்பான தகவலை தெரிவிக்காத காரணத்தால் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு 2 வருடம் கிரிக்கெட் விளையாட தடைவிதித்துள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க ஷகிப் அல் ஹசன் தலைமையிலான 15 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.ஐசிசியின் இந்த தடை உத்தரவால் வங்கதேச அணிக்கு மூத்த வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படுவார். மஹ்மதுல்ல ரியாத் டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...