துப்பாக்கிச் சுடும் போட்டியில் மீண்டும் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்!

நவம்பர் 21, 2019 208

சீனா (21 நவ 2019): சீனாவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

சீனாவின் புடியான் நகரில் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப் தங்கம் வென்றுள்ளார். இவர் 250.8 புள்ளிகளை பெற்றுள்ளார். இதன் மூலம் நடப்பாண்டில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளது.

முன்னதாக, ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் 251.7 புள்ளிகள் பெற்று இளவேனில் தங்கம் வென்றார்.

ஏற்கனவே பிரேசிலில் நடைபெற்ற 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நிலையில் மீண்டும் தங்கம் வென்று சாதித்துள்ளார்.

20 வயதுப் பெண்ணான இளவேனில் வெற்றியைத் தமிழகமே கொண்டாடி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...