சென்னை : இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவிற்கு தடைவிதிக்கக்கோரி முத்துகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை : பாடகர் கோவன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்துள்ளது. மேலும் இதுகுறித்து நவம்பர் 17-ஆம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

புது டெல்லி : "அரபு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியும், உலகை அச்சுறுத்தியும் வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத இயக்கத்திற்கும், இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் மதவாத இயக்கத்திற்கும் வித்தியாசம் எதுவுமில்லை" என்று பிரபல வரலாற்று ஆசிரியரும், ஆய்வாளருமான இர்பான் ஹபீப் தெரிவித்துள்ளார்.

புது டெல்லி(02 நவ. 2015): மீன்பிடி கடல் எல்லையைத் தாண்டும் தமிழக மீனவர்களுக்கு ரூ. 25 கோடி அபராதம் என்றுள்ள இலங்கைக்கு மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபி ரீம் தீவில், உலகின் மிகப்பெரிய உள்ளரங்க விளையாட்டு செயற்கை பனிப்பூங்கா அமைய உள்ளது. வருகின்ற 2018 - ஆம் ஆண்டு திறக்க திட்டமிட்டப்பட்டுள்ள இந்த வணிக வளாகத்தில் 85 உணவகங்களும், 450 கடைகளும் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா : சீனாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி கட்டிடத் தொழிலாளர்கள் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 23 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். "கட்டிடத்தின் அஸ்திவாரம் பலவீனமாக இருந்ததே விபத்துக்கு காரணம்" என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

துபாய் : துபாயில் மிக பெரிய வணிக வளாகங்களில் ஒன்றான‌ மால் ஆப் எமிரேட்சில் நேற்று முன்தினம் மாலை உலகின் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம், தனது நிறுவனத்தின் ஸ்டோர் ரூமை திறந்துள்ளது.

சென்னை : தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக 242.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மும்பை : மும்பையில் இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி முகர்ஜி மற்றும் இவரது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் ஓட்டுநர் ஷ்யாம் ராய் ஆகிய மூவரின் நீதிமன்ற காவலையும் நவம்பர் ஏழாம் தேதி வரை நீட்டித்து  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மதுவிலக்கு கோரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!