சென்னை: ஆர்.கே நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடப்பதற்கு வாய்ப்பு இல்லாததால் இந்த இடைத்தேர்தலை புதிய தமிழகம் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்து உள்ளார்.

புது டெல்லி : உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றிப்பார்ப்பதற்கான கட்டணம் இந்தியர்களுக்கு தற்போது வசூலிக்கும் ரூ.20 லிருந்து ரூ 40 ஆகவும், வெளிநாட்டவருக்கு ரூ.750-லிருந்து ரூ.1250 ஆகவும் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருச்சி: திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கடந்த 24-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் இன எழுச்சி அரசியல் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிறுவனர் சீமான் மற்றும் 39 பேர் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது(128ஏ), இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது(153 ஏ),

நெல்லை: நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பிகோவில் வனச்சோதனைச் சாவடியில் பணியில் இருந்த வனக்காவலர் சுப்பிரமணியன் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க பிரமுகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனி: பழனி அருகே மரிசலம்பு ஊராட்சி மார்கண்டயபுரத்தில் தம் 3 பிள்ளைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு தாய், தந்தை இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விரிவாக வாசிக்க..

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திருவண்ணாமலை ரோடு மேச்சேரி நகர் அருகே 2 அரசு பஸ்கள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணி ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகா: "கர்நாடக அமைச்சரவை கூட்டம் வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து ஷாங்காய் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜின்கள் திடீரென நடுவானில் செயலிழந்தது. எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. அதில் பயணம் செய்த 194 பயணிகளும் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பினர்.

விரிவாக வாசிக்க...

இலங்கை: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சேவை விசாரணைக்கு வருமாறு நிதிமோசடி தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

மதுரை: ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...