ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று ( 23.5.2012) நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், தோனியின் அதிரடி ஆட்டத்தினால்,மும்பை இந்தியன்ஸ் அணியினை தோற்கடித்து, அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
கிரிக்கெட்
ஐபிஎல் - சென்னையை கரையேற்றிய தோனி
இறுதிச் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ்!
தலைப்பைப் பார்த்தவுடன் தலை சுற்றுகிறதா? ஆம் இப்படிதான் போட்டுள்ளனர் ஐ.பி.எல் இணைய தளத்தில். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தோல்வியைத் தழுவ ஒரு வழியாக ஆடாம ஜெயித்தோம் என்ற பாணியில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
யூசுப் பதான் அபாரம் - இறுதிப் போட்டியில் கொல்கத்தா
ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இன்று புனேயில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணியினை 18 ரன்களில் தோற்கடித்து இறுதிப் போட்டியில் நுழைந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட் செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் காம்பீரும்,மெக்கல்லமும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
16 பந்துகளில் 32 ரன்கள் குவித்த காம்பீர் ரன் அவுட் ஆன பிறகு கொல்கத்தாவின் ரன் ரேட் விகிதம் குறைந்தது. அந்த அணியின் மெக்கல்லம் 31 ரன்களும், காலிஸ் 30ரன்களும் எடுத்தனர். ஸாகிப் அல் ஹஸன் 1 ரன்னில் அவுட் ஆகவும் 16 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த யூசுப் பதானும், லக்ஷமி சுக்லாவும் கடைசி நான்கு ஓவர்களில் 58 ரன்கள் குவிக்க 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 162 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் 21 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்து 40 ரன்கள் குவித்தார்.சுக்லா 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.
163 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டில்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னரும் ( 7 ரன்கள்), சேவாக்கும் (10 ரன்கள்) விரைவில் பவுலியன் திரும்பினர். பின்னர் ஓஜாவும்,ஜெயவர்த்தனேவும் சிறப்பாக ஆடினர். ஜெயவர்த்தனே, இக்பால் அப்துல்லாவின் பந்து வீச்சில் 40 ரன்களில் அவுட் ஆகியதும், டில்லி அணியின் மற்ற வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் நாரின் மற்றும் காலிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
தோல்வியுற்ற டில்லி அணி, நாளை சென்னை மற்றும் மும்பைக்கு இடையில் நடைபெறும் போட்டியில் வெல்பவர்களுடன் மீண்டும் மோத உள்ளது. அந்தப் போட்டியில் வெல்பவர்கள் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை சந்திக்க உள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற தயார் : ராகுல் சவால்

மும்பை : மும்பையில் ஓக்வுட் ப்ரிமியர் ஓட்டலில் நேற்று நள்ளிரவு நடந்த பார்ட்டியில் போதை மருந்து வைத்திருந்ததாக கூறி பெண்கள் உள்ளிட்ட 94 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேற்றம் - பெங்களூரு தோல்வி!
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெக்கான் சார்ஜர் அணி. வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற பரபரப்பான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஆட்டத்தை விட்டு வெளியேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
கூடுதல் செய்திகள்...
Page 1 of 26
கிரிக்கெட்