இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு கிரிக்கெட் அப்ரிதிக்கு 7 இலட்சம் டாலர் - பங்களாதேஷ் பிரிமியர் லீக்!

அப்ரிதிக்கு 7 இலட்சம் டாலர் - பங்களாதேஷ் பிரிமியர் லீக்!

கிரிக்கெட்டின் அடுத்த பரிமாணமாக, ஆட்டக்காரர்களை குழுமங்கள் ஏலம் எடுத்து போட்டி நடத்தும் முறையாக ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது போல பீ.பி.எல். போட்டியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிப்ரவரி 10 முதல் 29 வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

வங்கதேசத்தின் இப்போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் டாக்காவில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் அதிகபட்சமாக விலை போனவர்கள் விபரம்:

பாகிஸ்தானின் அப்ரிடி   7 லட்சம் டாலருக்கு  ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

அடுத்து, மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் 5.5 லட்சம் டாலருக்கும்,

சக நாட்டவர்களான மார்லன் சாமுவேல்ஸ் 3.6 லட்சம் டாலர்களுக்கும்,

பொல்லார்டு 3 லட்சம் டாலர்களுக்கும் எடுக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் வீரர்களைத் தவிர இலங்கையின் முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ்,பாகிஸ்தானின் ஷோயப் மாலிக், மேற்கிந்தியத் தீவுகளின் டுவைன் பிராவோ,  நியூஸிலாந்தின் ஸ்காட் ஸ்டைரிஸ், ஜிம்பாப்வேயின் பிரென்டன் டெய்லர் உள்ளிட்டோரும்  நல்ல விலை போயினர்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: