இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு கிரிக்கெட் அடிலெய்ட் டெஸ்ட்: அடிபின்னிய ஆஸ்திரேலியா 335/3!

அடிலெய்ட் டெஸ்ட்: அடிபின்னிய ஆஸ்திரேலியா 335/3!

அடிலெய்ட் டெஸ்ட்இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் ஆட்டத்தொடரின் நான்காவது மற்றும் இறுதி ஐநாள் ஆட்டம் அடிலெய்ட் நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 3 ஆள் இழப்புக்கு 335 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இந்திய அணியில் தலைவர் தோனிக்கு ஒரு ஐநாள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்ததால், இப்போட்டியில் ஷேவாக் அணித்தலைவராகச் செயல்பட்டார்.

தோனியின் இடத்தில் காப்பாளர் மற்றும் மட்டையாளராக புதியவரான சாஹா இடம் பெற்றுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் வினய் குமார் நீக்கப்பட்டு சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மீண்டும் அணிக்குத் திரும்பிய அஸ்வினின் பந்து வீச்சில் ஆஸ்திரேலியர்கள் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டனர்.  முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பான்டிங் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி நிதானமாக ஆட ஆரம்பித்து 137 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.  அவரைப் போலவே தற்போதைய அணித்தலைவர் கிளார்க்கும் 140 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்தியத்தரப்பில் அஸ்வின் இருவரையும், ஸாஹிர்கான் ஒருவரையும் வீழ்த்தினர்.

சுருக்கமான எண்ணிக்கை விபரம்:  டேவிட் வார்னர் - 8,  ஷான் மார்ஷ் - 3, எட்கோவன்  -30, ரிக்கி பாண்டிங் - 137 (ஆடுகிறார்), மைக்கேல் கிளார்க் - 140 (ஆடுகிறார்)

பந்துவீச்சு: ஸாஹிர்கான் - 1 , அஸ்வின் - 2

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: