இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு கிரிக்கெட் முதல் ஒருநாள் ஆட்டத்திலும் இந்தியா தோல்வி

முதல் ஒருநாள் ஆட்டத்திலும் இந்தியா தோல்வி

மெல்போர்னில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா பரிதாபமாகத் தோல்வி கண்டுள்ளது.

மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 32 சுற்றுவீச்சுகளாகக் குறைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய ஆஸி. அணிஅடுத்தடுத்து தொடக்க வீரர்களை இழந்தாலும், பின்னர் மைக் ஹஸ்ஸியும் டேவிட் ஹஸ்ஸியும் ஆடிய அதிரடி ஆட்டத்தால் மீட்சி பெற்றது. 32 பந்துகளில் 45ஓட்டங்கள் குவித்தார் மைக் ஹஸ்ஸி. 30 பந்துகளிலேயே 61  ஓட்டங்கள் (நான்கு நான்கடிகள், மூன்று ஆறடிகள்) என்று வெளுத்து வாங்கினார் டேவிட் ஹஸ்ஸி. இந்தியத் தரப்பில் வினய்குமார் 21 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து மூவரை வீழ்த்தினார்.

ஆஸி.யின் தொடக்க ஆட்டக்காரர் மாத்யூ வாட் 67 ஓட்டங்கள் குவித்திருந்தார். அவரே ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். பிறகு 32 சுற்றுவீச்சுகளில் 217 ஓட்டங்களைக் குவிக்க வேண்டிய இந்திய அணி 151 ஓட்டங்களையும் களத்தில் எடுக்க முடியாமல் ஓய்வறை நோக்கி ஓட்டம் பிடித்தது. இந்தியாவில் அதிகபட்சமாக விராட் கோஹ்லி 31 ஓட்டஙக்ளும், அணித்தலைவர் தோனி 29 ஓட்டங்களும் எடுத்தனர். ஆஸி. அணியின் கிளிண்ட் மெக்கே 20 ஓட்டங்களே விட்டுக் கொடுத்து இந்திய வீரர்கள் நால்வரை வீழ்த்தியது குறிக்கத் தக்கது.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: