
இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆஸ்திரேலியாவுக்குஎதிரான போட்டியில் விளையாடிய காம்பீர், காயம் அடைந்த ராகுல் சர்மாஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அதிரடி மட்டையடிவீரர் ஷேவாக்,வேகப்பந்து வீச்சாளர் ஸாகீர்கான் சேர்க்கப்பட்டிருந்தனர்.
பூவா தலையா வென்ற இலங்கை அணி முதலில் களமிறங்கி 8 வீரர்களை இழந்து 233 ஓட்டங்களைக் குவித்திருந்தாலும் பின்னர் களமிறங்கிய இந்கிய அணி 47 ஆவது சுற்றிலேயே 6 ஆட்டக்காரர்களை மட்டுமே இழந்து, வெற்றி இலக்கான 234 ஓட்டங்களை எடுத்து வென்றது இலங்கை அணியின் தொடக்க ஈணையை ஸாகீர்கான் எளிதில் பிரித்தார். எண்ணிக்கை 12ஆக இருந்த போது நான்கு ஓட்டங்களே எடுத்திருந்த தரங்கா தெண்டுல்கரிடம்பிடி கொடுத்து ஸாகீர்கான் பந்தில் வெளியேறினார்.
2-வது இணையான தில்சான் சங்ககரா இணை பொறுப்புடன் ஆடியது. குறிப்பாக தில்சான் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். மேண்டும் ஸாகீர்கான் தான் இந்த ஜோடியை பிரித்தார்.16.4-வது சுற்றில் ஓட்ட எண்ணிக்கை 74ஆக இருந்தபோது சங்ககரா 26 ஜாகிர் பந்தில் ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய தில்சான் 48 ஓட்டங்களில் ஜடேஜா பந்தில் ஓய்வறை திரும்பினார். அப்போது இலங்கை அணி 24.3 சுற்றில் 100 ஓட்டங்களில் இருந்தது. 4-வது இணையான சண்டிமால் - ஜெய வர்த்தனே ஜோடிநிதானமாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தது. 36-வது ஓவரில் அஸ்வின் இந்த இணையை பிரித்தார். ஜெயவர்த்தனே 23 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அப்போதுஎண்ணிக்கை 152ஆக இருந்தது. மறுமுனையில் இருந்த சண்டிமால் 66 பந்தில் 4 நான்கடியுடன் 50 ஓட்டங்களைத் தொட்டார். அவருக்கு இது 4-வது அரைசதம் ஆகும்.
அடுத்து களம் வந்த பெரைரா 7 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். 40-வது சுற்றில் இலங்கை அணி 5 வீரர் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. அபாரமாக ஆடிக் கொண்டிருந்த சண்டிமால் 64 ஓட்டங்களில் அஸ்வின் பந்தில் 'காப்பாளர் அடி'க்கு `(ஸ்டம்பிங்)' ஆளானார். இறுதியாக இலங்கை அணி 50 சுற்றுகள் முடிவில் 8 வீரர்களை இழந்து 233 ஓட்டங்கள் எடுத்திருந்து.
இந்திய பந்து வீச்சாளர்கள் தரப்பில் அதிக பட்சமாக அஸ்வின் மூவரையும், ஸாகீர்கான் இருவரையும் கைப்பற்றினார்கள் இந்திய அணியின் சார்பில் சேவாக் 10 ஓட்டங்க்களும், டெண்டுல்கர் 48 ஓட்டங்க்களும் கோலி ஓட்டங்க்களும், ரோகித் சர்மா 10 ஓட்டங்க்களும்,ரெய்னா 24 ஓட்டங்க்களும் தோனி 4 ஓட்டங்க்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்ட முடிவில் ஜடேஜா 24 ரஓட்டங்க்களுடனும், அஷ்வின் 30 ஓட்டங்க்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆட்டநாயகனாக அஷ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|