இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு கிரிக்கெட் கோஹ்லி அபார சதம்!

கோஹ்லி அபார சதம்!

கோஹ்லி அபார சதம்!இந்தியா-ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்து வரும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கோஹ்லி அபாரமாக ஆடி சதமடித்தார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடர் போட்டி நடந்து வருகிறது. அடிலெய்டில் நடக்கும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 604 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, நேற்று இரண்டாம் நாள் ஆட்டநேர இறுதியில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 12 ரன்களுடன் சச்சினும் 30 ரன்களுடன் காம்பீரும் ஆட்டத்தைத் துவக்கினர். சிறிது நேரத்திலேயே காம்பீர் 34 ரன்களுடனும் சச்சின் 25 ரன்களுடனும் நடையைக் கட்டினர். பின்னர் இறங்கிய லக்‌ஷ்மணனும் சொற்ப ரன்களில் அவுட்டானார்.

ஒரு பக்கத்தில் கோஹ்லி நிதானமாக ஆடினார். இவருக்கு சஹா சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் துணை நின்றார். சஹா 35 ரன்களுடன் அவுட்டான பிறகு இறங்கிய எவரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில் இந்தியா அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 272 ரன்கள் எடுத்தது. ஒரு பக்கம் எவருமே நிலைத்து நின்று ஆடாமல் இருந்தாலும் விராட் கோஹ்லி மட்டும் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 213 பந்துகள் எதிர்கொண்டு, 11 பவுண்டரி ஒரு சிக்சருடன் 116 ரன்கள் எடுத்தார்.

தற்போது ஆஸ்திரேலியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவங்கி ஆடி வருகிறது.

Comments  

 
0 # madhan 2012-01-27 13:59
the innings india is confirm success because i love my india
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: